kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
Photobucket Photobucket

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

அரையிறுதி போட்டிகள்

இன்றைய அரையிறுதி போட்டியில் பங்குகொண்ட U.K விளையாட்டுக் கழகத்திற்கம் உதயசூரியன் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  U.K  விளையாட்டுக்கழகத்தினர் 20 பந்துப்பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இளந்து 127 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணியினர் 14.3 பந்துப்பரிமாற்றங்களில் 60 ஓட்டங்களை பெற்று அனைத்து இலக்குகளையும் இளந்தனர் இவ்விளையாட்டில் U.K விளையாட்டு கழகத்தினர் 67 ஓட்டங்களால் வெற்யீட்டி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்

உதயசூரியன் அணித்தலைவர்


U.K அணித்தலைவர்
.

அரையிறுதி போட்டிகள்

இன்றைய அரையிறுதி போட்டியில் பங்குகொண்ட சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் சென் மேரிஸ்  விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தாளையடி சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தினர் 16 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இளந்து 36 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்மேரிஸ் அணியினர் 11.5 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகளை மாத்தரமே இளந்து 38ஓட்டங்களை பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.


26.04 அன்றைய நிகழ்வொன்று

26.04.2014 , இரண்டாவது போட்டியான, UK விளையாட்டுக் கழகத்தினருக்கும்  உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய UK விளையாட்டுக்கழகத்தினர் 16.4 பந்துப்பரிமாற்றங்களில் 71 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செந்தமிழ் அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்களில்  62 ஓட்டங்களை அனைத்து இலக்குகளும் இழந்து  9 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.









பொன்விழா மூன்றாம் நாள் நிகழ்வுகள்

சக்திவேல் விளையாட்டுக்கழகத்தினரின் பொன்விழா நிகழ்வின் மூன்றாம் நாளான இன்றைய விளையாட்டு நிகழ்வுகள் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது. தேசியக்கொடியினை இன்றைய விளையாட்டுக்களின் நடுவர்களில் ஒருவரான மிறாச் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியினை சக்திவேல் வி.க செயலாளர் கௌசிகராசா அவர்கள் ஏற்றிவைத்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு நடுவர்களில் ஒருவரான மிறாச்
 சக்திவேல் வி.க செயலாளர் கௌசிகராசா

இன்றைய நிகழ்வுகள்

இன்றைய மூன்றாவது போட்டியான, தாளையடி சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கும்  குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தாளையடி சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தினர் 15 பந்துப்பரிமாற்றங்களில் 60 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குடத்தனை செல்வா அணியினர் 13.2 பந்துப்பரிமாற்றங்களில்  45 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.






.

இன்றைய நிகழ்வுகள்

இன்றைய முதலாவது போட்டியாக ஆழியவளை அருணோதயா விளையாட்டுக் கழகத்தினருக்கும்  வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அருணோதயா விளையாட்டுக்கழகத்தினர் 20 பந்துப்பரிமாற்றங்களில் 126 ஓட்டங்களிற்கு தமது 7 இலக்குகளை இழந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணியினர் 17 பந்துப்பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றனர்.











வெள்ளி, 25 ஏப்ரல், 2014


இன்றைய இரண்டாவது  போட்டியாக வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக் கழகத்தினருக்கும்  கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென் மேரிஸ் விளையாட்டுக்கழகத்தினர் 12.3 பந்துப்பரி மாற்றங்களில் 101 ஓட்ங்களிற்கு தமது சகல இலக்குகளையும் இழந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றம்போ அணியினர் 13.2 பந்துப்பரிமாற்ரங்களில் சகல இலக்குகளையும் இழந்து 52 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.

றம்போ அணித்தலைவர் சதீஸ்




சென்.மேரிஸ் அணித்தலைவர் றொகான்

இன்றைய முதலாவது போட்டியாக உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தினருக்கும்  உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாரதி விளையாட்டுக்கழகத்தினர் 13.2 பந்துப்பரிமாற்றங்களில் 40 ஓட்டங்களிற்கு தமது சகல இலக்குகளையும் இழந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செந்தமிழ் அணியினர் 9.4 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.

பாரதி வி.க அணித்தலைவர் சுதா
 செந்தமிழ் வி.க அணித்தலைவர் விக்னம்

சக்திவேல் விளையாட்டுக் கழகத்தினரின் 50வது ஆண்டு நிகழ்வினை சிறப்பிகும் முகமாக நடாத்தப்படும் விளையாட்டு விழா இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வினில் எமது கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ் விழாவின் ஆரம்ப நிகழ்வினில் எமது கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் கழகத்தின் முதற்தலைவருமான அமரர் சண்முகம் வேலுப்பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து எமது பழைய மைதானத்திலிருந்து பொதுச்சுடர் வெட்டு முருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து புதிய மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அப்புக்குட்டி தனபாலசிங்கம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.