kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
Photobucket Photobucket

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ஸ்கைப்பின் புதிய வசதி

இன்றைய காலகட்டத்தில் ஸ்கைப்பானது இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான் மென்பொருளாக காணப்படுகிறது.குறிப்பாக இலவசமாக

ஆபீஸ் 2010 - வேகமாக இயக்க


தற்சமயம் வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பு, அதன் பதியப்பட்ட நிலையில் தரப்பட்டிருக்கும் சில வடிவமைப்புகளையும், வசதிகளையும், நம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வழிகளைத் தந்துள்ளது. இந்த தொகுப்பினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தொடக்க நிலையில் உள்ள இதன் வண்ணம், பயன்பாட்டில் உள்ள சில வழிகள் ஆகியவை தங்கள் ரசனைக்கும் பயன்படுத்தும் முறைக்கும் இணைந்து செல்வதில்லை என்றே கருதுகிறார்கள். எனவே இவற்றை மாற்றும் வழிகளையும் இந்த தொகுப்பு தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.

1.வண்ணக் கட்டமைப்பை மாற்றுக: இது ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்து வதிலான மாற்றம் அல்ல. அதனைப் பயன்படுத்தும் சூழ்நிலை சம்பந்தப்பட்டது. இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ள மென்மையான ஊதா வண்ணத்துடன் தரப்பட்டுள்ள அனைத்து வண்ணங்களும், வேலை பார்க்கையில் சற்று எரிச்சலைத் தந்து, வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகப் பலரும் எண்ணுகின்றனர். குறிப்பாக கருப்பு வண்ணப் பின்னணியில் கிடைக்கும் வெள்ளை வண்ணத்திலான எழுத்துக்களை யாரும் விரும்புவதில்லை. இந்த வண்ணக் கட்டமைப்பினையே மாற்றிவிடலாம். இந்த வழிகள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் பொருந்தும். முதலில் பைல் டேப்பினத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் உள்ள ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடுக. மீண்டும் கிடைக்கும் பிரிவுகளில், இடது புறம், ஜெனரல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கலர் ஸ்கீமில் ஒரு கீழ்விரி கட்டம் தரப்படும். இங்கு உங்களுக்குத் தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

2. ரிப்பனை மாற்றி அமைக்க: ஆபீஸ் 2007 தொகுப்பில், முதல் முதலாக ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் இதனை விரும்பவில்லை. புதியதாக ஒன்றைத் தந்து பயன்படுத்து என்று சொன்னால், பொதுவாக யாருக்குமே ஒரு வெறுப்பு வரும். ஆனாலும் வேண்டா வெறுப்பாக இதனை அனைவரும் பயன்படுத்தினார்கள்.
இப்போது ஆபீஸ் 2010 தொகுப்பிலும் இது தரப்பட்டுள்ளது. இதனை ஏன் நமக்கேற்றபடி வைத்துக் கொள்ளக் கூடாது? என்ற நம் கேள்விகளுக்கேற்ப, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த ரிப்பனை வளைக்க சில வழிகளைத் தந்துள்ளது. இந்த வழிகள் மூலம், ஆபீஸ் 2003 தொகுப்பிலிருந்து, புதிய தொகுப்பிற்கு மாறுபவர்களுக்கு ஏற்படும் சில தொல்லைகளைத் தீர்க்கலாம். இதில் ஒருவர் அடிக்கடி பயன்படுத்தாத சில கட்டளைகளை இதிலிருந்து நீக்கலாம். அல்லது அவற்றைத் தனியே பிரித்து, டேப் ஒன்றில், இன்னொரு இடத்தில் வைக்கலாம். கட்டளைகளின் பெயர்களைக் கூட மாற்றலாம். இதில் இன்னொரு சிறப்பான அம்சமும் உள்ளது. இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட ரிப்பனை, சேவ் செய்து இன்னொரு கம்ப்யூட்டரில் உள்ள ஆபீஸ் 2010 தொகுப்பிலும் அமல் படுத்தலாம். உங்கள் வீட்டு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் ஆபீஸ் தொகுப்பில் மாற்றப்பட்டதனை, அலுவலகக் கம்ப்யூட்டருக்கும், லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் கொண்டு செல்லலாம். மாற்றும் வழிகள் அனைத்தும் என்ற http://news.officewatch.com/t/n.aspx?a=968முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ளது.

3. குயிக் அக்செஸ் டூல்பார்: ரிப்பனை நம் வழிக்குக் கொண்டு வந்தது போல, அடிக்கடி நாம் பயன்படுத்தும் சில கட்டளைகளை, அவை எந்த ரிப்பன் டேப்பில் இருந்தாலும், விரைவாகப் பெற வேண்டும் என விரும்புவோம். இங்கு தான் குயிக் அக்செஸ் டூல் பார் நம் உதவிக்கு வருகிறது. ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த வசதியினை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. இந்த டூல்பாரில் Save, Save As, Undo, Redo, Email, New Comment மற்றும் New Document போன்ற அனைத்து கட்டளைகளையும் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம். அதே போல இந்த டூல்பாரையும், ரிப்பனுக்கு மேலாக இல்லாமல், அதன் கீழாக வைப்பது, இவற்றை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.
4. லைவ் பிரிவியூ இயக்கலாமே!: வேர்ட் டாகுமெண்ட்களில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் செய்கையில், அது எந்த வடிவமைப்பில், டாகுமெண்ட்டில் ஒட்டிக் கொள்ளும் என்பது தெரியவராது. ஒட்டிய பின்னரே, இதனை வேறு முறையில் வைத்திருக்கலாமே என்று எண்ணுவோம். இந்த குழப்பத்தினைத் தவிர்க்க, வேர்ட் தொகுப்பில் லைவ் பிரிவியூ என ஒரு வசதி தரப்பட்டுள்ளது. பிரிண்ட் கொடுக்கும் முன், டாகுமெண்ட் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனைப் பிரிண்ட் பிரிவியூ மூலம் அறிந்து கொள்வது போல, ஒட்டும் முன் எப்படி ஒட்டப்படும் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். எந்த பார்மட்டில் ஒட்டப்பட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்து, அந்த வகையில் ஒட்டலாம். ஆனால், இந்த வசதி, ஆபீஸ் 2010 தொகுப்பினைப் பதிகையில், இயக்கப்படாமல் உள்ளது. இதனை இயக்க நிலையில் வைத்திட, File | Options சென்று Generalபிரிவில் Enable Live Preview செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

5. ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் சரி செய்க: டாகுமெண்ட் தட்டச்சு செய்கையில் ஏற்படும் பொதுவான பிழைகள் தானாகச் சரி செய்யப் படுவதற்காகத் தரப்பட்டுள்ள ஒரு அருமையான வசதி ஆட்டோ கரெக்ட் ஆகும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும். ஆனால் சில வேளைகளில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில சொற்களை டைப் செய்தாலும், ஆட்டோ கரெக்ட் வசதி, அதனைத் திருத்தி மாற்றி அமைக்கும். எடுத்துக்காட்டாக, சொல் ஒன்றின் முதல் இரு எழுத்துக்களைப் பெரிய எழுத்துக்களாக அமைத்து எழுத வேண்டிய சூழ்நிலையில், அப்படி அமைத்திடும்போது, ஆட்டோ கரெக்ட் அதனைத் தவறென்று கருதி, மாற்றிவிடும். நாம் என்ன செய்தாலும் இரண்டு எழுத்துக்களைத் தொடர்ந்து பெரிய எழுத்துக்களாக அமைத்து சொல்லை அமைக்க முடியாது. எடுத்துக்காட்டாக, Thomas Rick என்பவர் அமைத்த ஒரு நிறுவனம் TRickஎன்றே எழுதப்படும். இதனை TRick என தட்டச்சு செய்கையில் ஆட்டோ கரெக்ட் TRick என மாற்றிவிடும். இதற்காக ஆட்டோ கரெக்ட் பட்டியல் சென்று TWo INitial Caps என்ற பதிவையே எடுத்துவிட்டால், பின் மற்ற தவறுகள் திருத்தப்படாமல் அமைக்கப்படும். எனவே சில விதிவிலக்குகளை இங்கு அமைத்திட வேர்டில் வழி தரப்பட்டுள்ளது. இந்த வழியைக் கீழ்க்காணும் முறையில் பெறலாம்.

1. BackStage மெனுவில் இடது பக்கம் உள்ள பிரிவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து AutoCorrect என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. AutoCorrect டேப்பில், Exceptions என்னும் பட்டனில் கிளிக் செய்திடுக.
4. பின்னர் INitial CAps என்ற டேப்பில் கிகிளிக் செய்து, Don’t Correct என்பதின் கீழ் குறிப்பிட்ட சொல்லை நீங்கள் விரும்பும் வகையில் டைப் செய்து, அதன்பின் Add என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும்.
இவ்வாறு விதிவிலக்கான சொற்கள் அனைத்தையும் இதில் இணைத்து வைத்துவிட்டால், ஆட்டோ கரெக்ட் உங்கள் விருப்பத்திற்கு மாறாகத் திருத்தாது.
மேலே தரப்பட்டுள்ள மாற்றங்களைப் போல, வேர்ட் தொகுப்பில் இன்னும் சில மாற்றங்களையும் மேற்கொண்டு, அதனை நம் வசதிக்கேற்ப அமைத்து வேகமாகப் பணியை மேற்கொள்ளலாம்

சனி, 29 ஜனவரி, 2011

விண்டோஸ் வேகமாக இயங்க

நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
1.மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும்.

2. இமெயில் போல்டர்: இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும்.

3. சரியான பயன்பாடு: போல்டர்களுக்குச் சரியான பெயர் கொடுத்து, மெயில்களைப் பொருள் வாரியாகப் பிரிக்கவும். ஒரே போல்டரில், அதிக மெயில்களைத் தேக்குவது போல்டர்கள் அமைத்த நோக்கத்தை செயல்படுத்தாது.

4. அப்புறம் பார்க்கலாம்: பின் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பல மெயில்கள் வரும். இவற்றிற்கென ஒரு போல்டரை உருவாக்கி அதில் போட்டு வைத்து, நேரம் கிடைக்கும்போது கண்டறிந்து, நீக்கவும்.

5. பிரவுசரின் தேடல் சாதனம்: உங்களுக்கென விருப்பமான தேடல் சாதனத்தினை, மாறா நிலைக்கு (டிபால்ட்) தேர்ந்தெடுத்து அமைக்கவும். இல்லையெனில், லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், சிஸ்டம் அமைத்த சர்ச் இஞ்சினும் , நீங்கள் பயன்படுத்த இன்னொன்றுமாய் கிடைக்கும்.

6.பைல் பெயர் மாற்றம்: பைல்களின் பெயர்களை மாற்ற விரும்புகிறீர்களா? நிறைய பைல்கள் மாற்றப்பட வேண்டுமா? முதல் பைலைத் தேர்ந்தெடுக்கவும். எப்2 அழுத்தவும். புதிய பெயரை டைப் செய்திடவும். இனி, என்டர் அழுத்தாமல், டேப் கீ அழுத்தவும். எக்ஸ்புளோரர் உங்களை அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லும். அந்த பைலின் பெயர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும். பேக் ஸ்பேஸ் கீயெல்லாம் அழுத்த வேண்டாம்.

7. இமெயில் செக்கிங்: அடிக்கடி உங்கள் இமெயில்களை செக் செய்து பெறும்படி அமைக்க வேண்டாம். இதனால், உங்கள் வழக்கமான கம்ப்யூட்டர் பணியில் தேவையற்ற குறுக்கீடு இருக்கும். எனவே எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திட வேண்டும் என்பதனை, இதன் அடிப்படையில் அமைக்கவும்.

8. பல பைல் தேர்ந்தெடுக்கும் எளிய வழி: ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கிறீர்களா? கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயை அழுத்தித் தான் பலரும் இந்த செயலை மேற்கொள்கிறோம். இதனால் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றான வழி ஒன்றும் உள்ளது. முதலில் Organize>Folder and search options>View என்று செல்லுங்கள். பின்னர் கீழாகச் சென்று Use check boxes to select items என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இதன் மூலம் டிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. ஸ்பேம் நீக்கவும்: உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸ்பேம் மெயில்களை வடிகட்டுவதற்கென புரோகிராம் இல்லை எனில், உடனடியாக ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும்.

10. விண்டோஸ் 7 கால்குலேட்டர்: விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில் கால்குலேட்டர்கள் இணைந்தே தரப்பட்டன. ஆனால் சில சிறப்பான கால்குலேட்டர் செயல்பாடுகளுக்கு, இணைய தளங்கள் தரும் இலவச கால்குலேட்டர் புரோகிராம்களை பதிந்து பயன்படுத்தினோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், வேறு ஒரு புரோகிராமிற்குச் செல்ல வேண்டியதில்லை. இதில் கிடைக்கும் கால்குலேட்டர் மிகச் சிறப்பானதாகப் பல செயல்பாடுகளைத் தாங்கி உள்ளதாக அமைந்துள்ளது.

11. பிரச்னை பதிவு: விண்டோஸ் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு, உங்கள் டெக்னீஷியனை அடிக்கடி அழைத்து, பிரச்னைகள் குறித்து நிறைய விளக்கம் தர வேண்டியுள்ளதா? நீங்கள் சொல்வது அவருக்கும், அவர் கேட்பது உங்களுக்கும் புரியாமல், பல தொலைபேசி அழைப்புகளை வீணாக்குகிறீர்களா? இது தேவையே இல்லை. Windows’ Problem Steps Recorder என்பதை இயக்கினால் போதும். வரிசையாக, ஒவ்வொரு ஸ்டெப் ஆக, என்ன நடை பெற்றது என்று உங்களுக்கு இது காட்டும். இதனைப் பெற PSR என ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். மிக விலாவாரியாக, ஸ்கிரீன் ஷாட்களுடன் உங்கள் பிரச்னைகளை இதில் காணலாம்.

12. திரை இடம் பெரிதாக: டாஸ்க்பார் ஐகான் பெரிதாக அமைந்து, மானிட்டர் திரையில், நீங்கள் இயங்கும் இடம் சுருங்குகிறதா? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Properties > Use small icons என அமைக்கவும். இதன் மூலம் அனைத்து ஐகான்களும் பாதியாக அதன் அளவில் குறையும். நீங்கள் இயங்க அதிக இடம் கிடைக்கும்.
13. சிறிய, பெரிய எழுத்துக்கள்: எழுத்துக்களை அமைத்துவிட்டு, அதனை முழுமையாகப் பெரிய எழுத்துக்கள் அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக அமைக்க வேண்டுமா? ஒவ்வொரு எழுத்தாகத் தேடிச் சென்று மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால், இந்த ஆப்ஷன்கள் வரிசையாகக் காட்டப்படும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.

14. பின் அப்: விண்டோஸ் 7 தொகுப்பில் எதனையும் டாஸ்க்பாரில் பின் செய்தி டலாம். அடிக்கடி பயன்படுத்தப் படும் போல்டர்கள், கண்ட்ரோல் பேனல், ஏன் ஒரு செயல்பாட்டிற்கென அமைக்கப் பட்ட பட்டனைக் கூட இதில் அமைத்திடலாம்.
15. ஆட் ஆன் நேரம்: உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு இயக்கத்திற்குக் கிடைக்க அதிக நேரம் ஆகிறதா? இதனுடன் இணைந்த ஆட் ஆன் தொகுப்பே இதற்குக் காரணம். Tools>Manage Addons சென்று ‘Load time’ என்பதில் ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கான நேரம் பார்க்கலாம். பின்னர், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் புரோகிராமினை, தேவை இல்லை என்றால் நீக்கிவிடலாம்.

விண்டோசினைப்பற்றி கூறிவிட்டு microsoft officeபற்றிகூறாமல் போவது சரியல்ல. நாளைய தினம் microsoft office பற்றிய தகவலினை எதிர் பாருங்கள்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட் (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில் “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால், Start மெனு சென்று My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும். இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI dots per inch) அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில் http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது.நாளை பார்ப்போம்

வியாழன், 27 ஜனவரி, 2011

விண்டோஸ்-7 தீர்வுகள்

விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.  விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 
1.பிரச்னைகளைப் பதிவு செய்: (PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான்Problems Step Recorder  என்னும் வசதி. பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், ஸ்டார்ட் கிளிக் செய்து,PSR  என டைப் செய்து, என்டர் தட்டவும். அதன் பின்னர் Start Record  என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், செலக்ட் செய்தாலும், கிளிக் செய்தாலும், டைப் செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL  பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிரச்னையைத் தீர்க்க வரும் கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம். 
2."சிடி'யில் இமேஜ்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தந்துள்ளது. அது சிடி மற்றும் டிவிடிக்களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான். கம்ப்யூட்டரில் உள்ள ஐ.எஸ்.ஓ. இமேஜ் மீது டபுள் கிளிக் செய்து, காலியாக உள்ள சிடி வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn  என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.
3. பிரச்னைகளைத் தீர்க்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’)  எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் சரி செய்து, சிஸ்டத்தை கிளீன் செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.
4. ஆபத்துக்கால "சிடி': நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc   எனச் சென்று, ஆபத்துக்காலத்தில் கம்ப்யூட்டர் பூட் செய்திட சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். 
5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்கு கின்றனரா? அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா? இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க,  AppLockerஎன்ற ஒரு புரோகிராம் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ளது GPEDIT.MSC என்ற புரோகிராமினை இயக்கிComputer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker   எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம் என்று பாருங்கள். 
6. கூடுதலாக கணக்கிடும் வசதி: விண்டோஸ் 7தரும் கால்குலேட்டர் பார்ப்பதற்கு, விஸ்டாவில் இருந்த கால்குலேட்டர் போல இருந்தாலும், இதன்  Mode   என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த கால்குலேட்டர் தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்.
7. மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்: முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் சிஸ்டம் ரெஸ்டோர். இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து, பின்னர் Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட், அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் ‘Scan for affected programs’என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.   
8.எக்ஸ்பி வகை இயக்கம்: பல லட்சக்கணக் கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் இணையத்தளமான இந்த இணையத்தளத்தில் இருந்து 
எக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை டவுண்லோட் செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.
9.சகலமும் ரைட் கிளிக்:  இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல டிஸ்பிளே செட்டிங்ஸ் என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள  எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், Documents, Pictures, the Windows folder  போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா! அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம்.  பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். 
10. மாறும் வால் பேப்பர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் வால் பேப்பராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும்ஒரு ஸ்லைட் ÷ஷாவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து,  Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.  பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில்   Shuffle   என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.   மேலே குறிப்பிட்டவை போல விண்டோஸ் சின்னஞ்சிறு வசதிகள் இன்னும்  பலவற்றைக் கொண்டுள்ளது. இவை சம்மந்தமாக இன்னுமொரு தினத்தில் அறியத்தருகின்றேன்.

பல இ மெயில்களை ஒன்றாக இணைக்கலாம்

நான்கைந்து இ மெயில் அக்கவுண்டுகள், ஆறேழு சாட்டிங் அக்கவுண்டுகளை வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் தனிதனியே பயன்படுத்தி தள்ளாடிக் கொண்டு இருப்பவர்கள் பலர். இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், ஒரே இடத்தில் இருந்தபடி இ மெயில்களை இணைக்கும் வசதியை வளங்குகுவதற்கு என்று ஒரு இணையத்தளம் உள்ளது.
அதற்கு நீங்கள்

புதன், 26 ஜனவரி, 2011

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.
முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

சேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெற

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம்.

முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்,

ஒருவேளை, ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே, படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள்.

அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால், மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள்.

இவர்களுக்காகவே, எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில்AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். அது இந்த வசதியில் ஒரு போனஸ் வசதியாகும்.

இந்த மந்திரத்தை அமைத்து செயல்படுத்திட, File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், இடது பக்கம் உள்ள Saveபிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

வலது பக்கம், Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல், நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் பொறுங்கள், எப்படி சேவ் செய்யாத பைலை மீட்டுப் பெறுவது என்று சொல்லவில்லையே! File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில், கீழாக வலது மூலையில், Recover Unsaved Documents என்று ஒரு பட்டன் இருப் பதனைக் காணலாம்.

இந்த பட்டன், உங்களை புரோகிராம் தானாக, நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு, அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும். இப்போதாவது ஞாபகமாக சேவ் செய்திடவும்.

ஜிமெயிலில் அற்புதமான புதிய வசதி

கூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள் “Did you mean” எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும்.

அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா? என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும். பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும். இதன் மூலம் நாம் தவறு செய்தாலும், சரியான தேடலுக்கு இது உதவிடுகிறது.

இப்போது இந்த வகை உதவி, ஜிமெயில் தேடலுக்கும் வழங்கப்படுகிறது.

இமெயில் இன்பாக்ஸ் அல்லது மற்ற பெட்டிகளில் நாம் காண விரும்பும் டெக்ஸ்ட் உள்ள இமெயில்களைப் பார்த்திட, சில சொற்களை அமைத்துத் தேடுகையில், இதுதானா நீங்கள் தேடுவது என, வேறு சில சொற்களும் காட்டப்படுகின்றன.

சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன.
சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன.

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.

இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.

சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner) - உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் - பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது.

அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ்.

இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும்.

பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும். பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படும்.

இந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும்.

இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.

மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.


கணணிக் குறுக்கு வளிகள் சில

Windows + ↑ (Up Arrow) – Maximize window
Windows + ← (Left Arrow) – Snap window to left side covering half of desktop space. Continue pressing the keyboard shortcut will rotate the window between snap to left, snap to right and restore to normal position.
Windows + → (Right Arrow) – Snap window to right side covering half of desktop space. Continue pressing the keyboard shortcut will rotate the window between snap to left, snap to right and restore to normal position.
Windows + ↓ (Down Arrow) – Minimize the window. Restore to normal size and position if the window is currently maximized.
Windows + Home – Clear all but the active window.
Windows + Space – All windows become transparent so you can see through to the desktop.
Windows + Shift + ← (Left Arrow) – Move the active window to the adjacent monitor on the left for dual or multiple monitors setup.
Windows + Shift + → (Right Arrow) – Move the active window to the adjacent monitor on the right for dual or multiple monitors setup.
Windows + T – Show preview thumbnail of running applications in Windows Taskbar one by one without mouse over.
Windows + P – Adjust presentation options of the display on computer or projector.
Windows + + (Add) – Zoom in.
Windows + – (Minus or Dash) – Zoom out.
Shift + Click a Taskbar item: Open a new instance of that particular application.
Other popular or common keyboard hotkeys which are already been used inWindows Vista:
Windows + D – Show desktop and restore desktop (minimize or restore all windows).
Windows + M – Minimize all windows.
Windows + U – Open Ease of Access Center.
Windows + F – Search window.
Windows + G – Bring all gadgets on top and foreground.
Windows + X – Run Windows Mobility Center.
Windows + R – Open ‘Run’ command.
Windows + E – Run Windows Explorer.
Windows + L – Lock the computer.
Windows + Pause [Break] – Open System Properties.
Windows + [number] – Activate and run the program pinned on Windows 7 Taskbar, running program won’t be affected.
Windows + Tab – Windows Aero Task Switcher
F1 – Help
F3 – Search